அனுஷ்கா ஷெட்டி
அனுஷ்கா செட்டி தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கில் நாகர்ஜுனாவுடன் இணைந்து சூப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 2006-ம் ஆண்டு ரெண்டு திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார்.
அனுஷ்கா செட்டி மங்களூரில் பிறந்து, பின்னர் பெங்களூரில் பள்ளி, கல்லூரிப் படிப்பினை முடித்தார். பின்னர் மும்பையில் யோகா ஆசிரியர் பரத் தாகூரிடம் யோகா பயின்று யோகா ஆசிரியை ஆனார். 2005-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது முன்னணி நடிகைகளுள் இவரும் ஒருவராக விளங்குகிறார்.
Comments
Post a Comment